கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள் இருவர் கைது: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World Short Story 09.02.2024

கனடாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்கள் இருவர் கைது

கனடாவின் சர்ரேயில் கொல்லப்பட்ட காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நெருங்கிய உதவியாளரின் வீட்டில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலை நேரம் தவிர்ந்த நேரங்களில் அலுவலக அழைப்பை மேற்கொள்ள தடை

வேலை மாற்றம் முடிந்த பிறகு, தங்கள் முதலாளிகளிடமிருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐஸ்லாந்து - கிரின்டாவிக்கில் வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்து - கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் எரிமாலை குழம்புகள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.56 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 115 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதுடன் நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

பாக்கிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் கட்சி முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இம்ரான் கான் கட்சி பல இடங்களில் முன்னிலை பெற்று வருவதாகவும் எனவே அக்கட்சி பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி 154 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

40 இற்கும் மேற்பட்ட சூடானியர்களுடன் துனிசியாவில் மூழ்கிய படகு

துனிசியாவின் கடல் பகுதியில் படகு மூழ்கியதில் சுமார் 13 சூடான் குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காணாமல் போயுள்ளதாக துனிசிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.