பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலையில்

OruvanOruvan

Imran Khan’s party-backed independent candidates lead in Pakistan elections

UPDATE: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் சற்று முன்னர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

336 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேந்தெடுக்கப்படவுள்ளனர்.

மீதமுள்ள 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில், 60 பெண்களுக்கும், 10 முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 133 இடங்கள் தேவை, ஆனால் தேர்தல் முடிவு ஒரு தீர்க்கமான வெற்றியை அளிக்காது என்று பல ஆய்வாளர்களால் ஊகிக்கப்படுகிறது.

இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலை

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்புடன் (PTI) இணைந்த சுயேட்சை கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

அவர்கள் 49 இடங்களை கைப்பற்றியதாக தேசிய தேர்தல்கள் ஆணையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 30 இடங்களில் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இஸ்லாமாபாத் பொலிஸார் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இஸ்லாமபாத் பொலிஸார்,

சட்டத்தை மதிப்பது அனைவருக்கும் கட்டாயம். ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - நவாஸ் ஷெரீப் முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று வியாழக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் பலியாகியும் இருந்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வன்முறைகள் வெடித்ததால் பாதுகாப்பை நிலைமை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இணைய தள சேவைகள் முடக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி இடையே கடும் போட்டி நிலை ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி நீண்ட நேரமாகியும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் ஆரம்பிக்கப்படாதிருந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி பெற்ற இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரீப் என்.ஏ.-130 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 24 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதுவரை 37 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதில் நவாஷ் ஷெரீப்பின் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இம்ரான் கானின் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 9 இடங்கிளில் வெற்றி பெற்றுள்ளது.

265 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 133 இடங்களை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பலூசிஸ்தானில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுவருகிறது. பாக். தலைநகர் இஸ்லாமபாத், கராச்சி, பலூசிஸ்தான் உட்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.