உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அதிகரித்துள்ளது: ஈரானில் 225 பேருக்கு மரண தண்டனை

OruvanOruvan

Death Penalty Deccon Herald

உலக முழுவதும் மரண தண்டனையை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்ற போதிலும் பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன.

அமெரிக்காவில் கொலை குற்றத்தை செய்த ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி உலகில் முதல் முறையாக அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் 36 பேர் உயிரிழக்க காரணமாக சம்பவம் தொடர்பாக ஜப்பானியர் ஒருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பல நாடுகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை இரத்துச் செய்திருந்தாலும் உலகில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு அரசசார்பற்ற அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டிருந்த புதிய புள்ளிவிபரங்களுக்கு அமைய 55 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் நடைமுறையில் இருந்தது. இந்த நாடுகளில் 9 நாடுகள் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தின. கொலை அல்லது கடுமையான குற்றச் செயல்களுக்காக மாத்திரமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. உலகில் 23 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக தண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த புள்ளிவிபரமானது ஊடக செய்திகள், மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், அவரது குடும்பத்தினரிடம் இருந்த கிடைத்த தகவல்களுக்கு அமைய தயாரிக்கப்பட்டது.

சீனாவில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டாலும் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படுவதில்லை.

சீனாவை தவிர கடந்த 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 883 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளுடன் ஒப்பிடும் போது இது 53 வீத அதிகரிப்பு எனவும் 2012 ஆம் ஆண்டு 579 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் மன்னிப்புச் சபை கூறியுள்ளது. இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனினும் 1988,1989 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளின் புள்ளிவிபரங்களுடன் ஒப்பிடும் போது அது மிகவும் குறைவான எண்ணிக்கை அந்த காலத்தில் ஒரு வருடத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 52 நாடுகளில் குறைந்தது 2 ஆயிரத்து 16 சந்தர்ப்பங்களில் மரண தண்டனை தொடர்பான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆண்டு 56 நாடுகளில் 2 ஆயிரத்து 52 மரண தண்டனைகள் தொடர்பான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

பல கைதிகள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் வரை வருடக்கணக்கில் அல்லது பல தசாப்தங்களாக சிறையில் இருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டில் 18 நாடுகளுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் 20 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன.

சீனா ஏனைய நாடுகளை விட மரண தண்டனை நிறைவேற்று நாடு என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இவர்கள் கணித்துள்ளதுடன் அதனை உறுதிப்படுத்த முடியாது.

சீனாவுக்கு அடுத்ததாக ஈரான்,சவுதி அரேபியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடகள் அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளன.

உலகில் வருடந்தோறும் 11 நாடுகள் மரண தண்டனைகளை நிறைவேற்றுகின்றன. சீனா, எகிப்து, ஈரான்,ஈராக்,சவுதி அரேபியா,அமெரிக்கா,வியட்நாம்,யேமன் ஆகிய நாடுகள் அதில் அடங்குகின்றன.

வடகொரிய தொடர்ந்தும் மரண தண்டனை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை நம்புகிறது. எனினும் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாது.

கடந்த 30 வருடங்களில் சவுதி அரேபியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகளவான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பஹ்ரேன்,கொமரோஸ்,லாவோஸ்,நைஜர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கடந்த 2022 ஆம் ஆண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் இதுவரை அந்த தண்டனையை நிறைவேற்றவில்லை.

அதேவேளை கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்துவது குறைந்துள்ளது.

இதனிடையே போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 325 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானில் 225 பேருக்கும், சவுதி அரேபியாவில் 57 பேருக்கும்,சிங்கப்பூரில் 11 பேருக்கு போதைப் பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பெண்ணொருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.2018 ஆம் ஆண்டு ஹெரோயினை கடத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய சரிதேவ் ஜமன் என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

OruvanOruvan

1991 ஆம் ஆண்டு 48 நாடுகள் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தாத நாடுகளின் பட்டியலில் இருந்ததுடன் தற்போது 112 நாடுகளில் மரண தண்டனைகளை எந்த வகையிலும் பயன்படுத்துவதில்லை. 2022 ஆம் ஆண்டு 6 நாடுகள் மரண தண்டனை இரத்துச் செய்துள்ளன.

இந்த நாடுகளில் கசகஸ்தான்,பப்புவா நியூகினியா,சியாரா லியோன் மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரவு என்பன மரண தண்டனை முற்றாக இரத்துச் செய்துள்ளன.

மிகவும் கொடூரமான குற்றங்களுக்காக மரண தண்டனையை பயன்படுத்துவதாக இக்வடோரியல் கினியா மற்றும் சம்பியா ஆகிய நாடுகள் கூறியுள்ளன.

கொலை குற்றம்,பயங்கரவாதம் உட்பட 11 பாரதூரமான குற்றங்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டத்தை மலேசிய பாராளுமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீக்கியது. கானா பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை முற்றாக ஒழிக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.

சவுதி அரேபியா மாத்திரமே தலையை துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றும் ஒரே ஒரு நாடாக 2022 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்டது. ஏனைய நாடுகள், தூக்கு, ஊசி மருந்து அல்லது துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளன.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் கொலை குற்றத்தை எதிர்நோக்கி கென்னத் ஸ்மித் என்ற நபருக்கு கடந்த ஜனவரியில் நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த முறையில் மரண தண்டனையை எதிர்நோக்கிய முதல் நபர் கென்னத் ஸ்மித்.

பரீட்சித்து பார்க்கப்படாத இந்த முறையை கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை என ஸ்மித்தின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

மரண தண்டனையை நிறைவேற்ற பயன்படுத்தப்படும் ஊசி மருந்து கிடைப்பது அரிதாகி இருப்பதால், அலபாமா மற்றும் அமெரிக்காவின் வேறு இரண்டு மாநிலங்கள் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்த அனுமதியளித்துள்ளன. இந்த ஊசி மருந்துக்கான தட்டுப்பாடே அமெரிக்காவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது குறைந்து போனமைக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.