நியூயார்க்கில் வாடகைக்கு வீடுகளை பெறுவதில் சிக்கல்: அங்கு வாழ விரும்புவோருக்கு அதிர்ச்சி

OruvanOruvan

New York

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வீடுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வீட்டுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு வாடகைக்கு எடுக்கக் காலியாக இருந்த வீடுகளின் விகிதம் 1.4 விழுக்காடாக சரிந்துள்ளது. 1968ஆம் ஆண்டுக்குப் பிறகு காலியாக இருந்த வீடுகளின் விகிதம் இவ்வளவு குறைவாகப் பதிவானதில்லை.

நகரில் வாழ விருப்பப்படுவோரிடையே வீடுகளுக்கான தேவைக்கு ஏற்ற வேகத்தில் கட்டுமானப் பணிகள் இடம்பெறவில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

பொதுவாக காலியாக இருக்கும் வீடுகளின் விகிதம் ஐந்திலிருந்து எட்டு விழுக்காடு வரை இருப்பது நல்லது என்று வீடமைப்பு வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

காலியான வீடுகளின் விகிதம் அதிகமாக இருக்கும்போது தேவைப்படுவோருக்கு உகந்த நேரத்தில் அடுக்குமாடி வீடுகள் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேவேளை அப்படிப்பட்ட சூழலில் வீட்டு உரிமையாளர்களுக்கிடையே வாடகைதாரர்களைப் பிடிப்பதற்கான போட்டியும் நிலவும். அவ்வாறு நேர்ந்தால் வாடகை விலை உயர்வு சீராக இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க்கின் வீடமைப்பு நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.