ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது தொடரும் தாக்குதல்கள்: 7 ஏவுகணை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

OruvanOruvan

American warship - Reuters

யேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று (09) ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 7 ஏவுகணைகளை தாக்கிய அழித்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

செங்கடலில் பயணிக்கும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால், வர்த்தக கப்பல்கள் ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை கடந்த பயணித்து வருகின்றன.

இதன் காரணமாக கப்பல் நிறுவனங்களின் செலவுகள் அதிகரித்துள்ளன. சர்வதேச வர்த்தகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஹவுதி போராளிகள் அமைப்பு கூறியுள்ளது.

இதனால், அமெரிக்க மற்றும் பிரித்தானிய படையினர் இணைந்து ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஹவுதி அமைப்பை இந்நாடுகள் மீண்டும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துள்ளன.