பனிப்படர்ந்த கடலில் சிக்கிகொண்ட திமிங்கலங்கள்: மீட்பு பணிகள் தீவிரம்

OruvanOruvan

வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் ஆழமான பனி படர்ந்த கடலில் 13 ராட்ஷச திமிங்கலங்கள் சிக்கியுள்ளன.

ஆர்காஸ் என்றும் அழைக்கப்படும் அந்த ராட்ஷச திமிங்கலங்கள் பனிபடர்ந்த கடலில் மேற்பரப்பில் இருக்கும் சிறிய இடைவெளியில் தங்கள் தலையை வெளியே நீட்டிகொண்டு உயிருக்கு போராடுவதை அந்நாட்டு அரசாங்க ஒளிபரப்பான ‘என்எச்கே’ வெளியிட்ட படங்களில் காண முடிந்தது.

13 ராட்ஷச திமிங்கலங்கள் பனிக்கட்டியின் துளையிலிருந்து தலையை வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை தான் கண்டதாக ‘வைல்டுலைஃப் ப்ரோ எல்எல்சி’ யின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளியைப் படம்பிடித்தவர் தெரிவித்ததாக ‘என்எச்கே’ கூறியது.

இந்த திமிங்கலங்களை உயிருடன் பாதுகாப்பான இடத்துக்கு மீட்டு கொண்டுசெல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.