பிலிப்பைன்ஸ் மண்சரிவில் சிக்கி ஆறு பேர் பலி: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்

OruvanOruvan

Short Story World 07.02.2024

பிலிப்பைன்ஸ் மண்சரிவில் சிக்கி ஆறு பேர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததுடன், 46 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

OruvanOruvan

Landslide hits village in the southern Philippines

சிலி ஜனாதிபதி உயிரிழப்பு-தேசிய அளவில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினிராவின் மறைவிற்கு தேசிய அளவில் மூன்று நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி கேப்ரியல் போரிக் தெரிவித்துள்ளார். நே்று இடம்பெற்ற செபாஸ்டியன் பினிரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

இந்தியர்களுக்கு ஈரானிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி

இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்க ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது. இது பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.

விஜயின் கட்சி பெயருக்கு ஏற்பட்ட சிக்கல்

விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. (TVK) என வழங்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியும் ஆங்கிலத்தில் டிவிகே என வருவதால், டிவிகே என்பதை விஜய்க்கு வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்த தாய்லாந்து

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தடை செய்ய தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பொழுது போக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதைத் தடை செய்வது தொடர்பான சட்ட வரைவு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிலியின் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி செபாஸ்டியன் பினிரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து இதுவரை 11 பேர் உயிரிழப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா நோக்கி வந்த கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், தீவிரமாக நடந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவிப்பு

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க சதி செய்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக வழக்கு தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.