2024 ஆம் ஆண்டை அச்சுறுத்தும் இயற்கையும் நவீன தொழிற்நுட்பமும்: AI தொழிற்நுட்பத்தால் ஏற்பட போகும் ஆபத்துக்கள்

OruvanOruvan

World Economic Forum

கனமழை, புயல், வெள்ளம் வறட்சி என இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலைமையில், அண்மைய காலமாக அதிகரித்து வரும் தொழிற்நுட்ப ரீதியான பல்வேறு தாக்குதல்கள் காரணமாக சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் 2024 ஆம் ஆண்டில் AI சம்பந்தப்பட்ட மோசடிகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் அரசியல் மோசடிகள் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் ஊடாக சர்வதேச ரீதியில் பல அபாயங்கள் ஏற்படப் போவதாக உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, பிரித்தானிய, மெக்சிகோ உட்பட உலகின் பல நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. சுமார் 300 கோடி மக்கள் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.

தொழிற்நுட்பம் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தேர்தலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையலாம் என்பதுடன். அந்தந்த நாடுகளில் தேர்தல் முடிவுகளிலும், ஜனநாயகத்தின் செயற்படுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

WCFWCF

The Top Global Risks un 2024 WCF

பொருளாதாரம், சுற்றுச்சூழல், இராஜதந்திரம், புவியியல் மற்றும் தொழிற்நுட்பம் உட்பட 34 அச்சுறுத்தல்கள் அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை பரப்புதல் என்ற மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா ஆறாவது இடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, காலநிலை தொடர்பான தவறான தகவல்களின் மூலம் ஏற்படும் ஆபத்துகள் 2024 ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1. மிக உச்சமான காலநிலை 66%

2. AI அடிப்படையிலான தவறான தகவல் 53%

3. சமூக/அரசியல் ஆபத்து 46%

4. வாழ்க்கைச் செலவு 42%

5. சைபர் தாக்குதல்கள் 39%

6. பொருளாதார வீழ்ச்சி 33%

7. அத்தியவசியமான பொருட்கள் மற்றும் வளங்களை வழங்குவதில் ஏற்படும் இடையூறு 25%

8 . நாடுகளின் ஆயுதப் படையினருக்கு இடையிலான போர் 25%

9. உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் 19%

10. உணவு விநியோக வலைமைப்பின் சீர்குலைவு 18% என ஆபத்துக்களை உலகப் பொருளாதார மன்றம் தரவரிசைப்படுத்தியுள்ளது.