அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு: 38 சத வீதமானவர்களே பைடன் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை ஆதரிக்கின்றனர்

OruvanOruvan

US President Joe Biden

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தல் குறித்து பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன.

கேலப் என்ற நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பின் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதை 38 சதவீதம் பேர் மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது இந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, 50 சதவீத அமெரிக்கர்கள் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ஆதரித்துள்ளனர்.

ஜோ பைடனின் முதுமை காரணமாக அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை பலர் விரும்பவில்லை.

அவரது வயது, மெக்சிகோவுடனான எல்லை பிரச்சினை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் போன்ற விடயங்கள் பைடனுக்கு எதிரான காரணிகளாக உள்ளன.

சிலர் டொனால்ட் ட்ரம்ப் வயதை சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளியிட்டாலும் பைடனுடன் ஒப்பிடும் போது அவரது வயது குறைவு எனக்கூறியுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் கேலப் என்ற நிறுவனம் இதற்கு முன்னரும் இவ்வாறான கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளது. எனினும் முடிவுகள் அதற்கு எதிர்மாறாக இருந்தது.