அமெரிக்காவின் டென்வரில் இரண்டு பேர் சுட்டுக்கொலை: குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்

OruvanOruvan

A shooting incident in the US

அமெரிக்கா கொலராடோ மாநிலத்தின் தலைநகர் டென்வரில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியான Green Valley Ranchல் நேற்று அதிகாலை 2.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் படுகாயமடைந்த இரண்டு பேர் அதிகாலை 6 மணிக்கு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு இளைஞனும் ஒரு சிறுவனும் அடங்குவதாக பொலிஸார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் சாட்சியங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.