பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன: தாக்குதல் சம்பவத்தில் 10 பொலிஸார் பலி

OruvanOruvan

Pakistan Police

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

கைபர் பக்துன்கவா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள சோத்வான் பொலிஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 10 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் எதிர்வரும் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது.

நேற்று அதிகாலை 3 மணியளவில் தீவிரவாதிகள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.