1.1 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் கார்: 1997 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது

OruvanOruvan

Ex US President Trump and Lamborghini Diablo VT

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய Lamborghini Diablo VT கார் பாரெட் ஜேக்சன் என்ற நிறுவனம் நடத்திய ஏலத்தில் 1.1 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலை உயர்ந்த Diablo கார் என்ற புதிய சாதனையை இது படைத்துள்ளது.

1997 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் வாங்கிய லம்போகினி நிறுவனத்தின் Diablo VT ரக காரே உலக சந்தையில் மிகவும் விலை உயர்ந்த மற்றும் பிரபலமான கார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காரை டிரம்ப் தனக்காக பிரத்யேகமாக வடிவமைத்தார் . Blue Le Mans என்ற விசேட வர்ணம் பூசப்பட்ட இந்த கார், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 132 கார்களில் ஒன்றாகும்.

டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, அந்த நிறுவனம் காரின் கதவில் Trump 1997 Diablo என்ற பெயர் பலகையையும் பொருத்தியது.

டிரம்ப் இந்த காரை கடந்த 2002 ஆம் ஆண்டில் விற்பனை செய்தார். இந்த கார் பின்னர் 2016 இல் ஈபேயில் விற்பனைக்கு வந்தது. அதன் பின்னர் எத்தனை பேர் கை மாறியது என்பது தெரியவில்லை. எனினும் அண்மையில் இந்த கார் 1.1 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

2016 ஆம் ஆண்டு வரை 14 ஆயிரத்து 655 கிலோ மீட்டார் வரை பயணித்துள்ள இந்த கார் ஏலத்தில் விற்பனை செய்யும் போது 15 ஆயிரத்து 431 கிலோ மீட்டர் பயணித்திருந்தது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் கார் அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

லம்போகினி நிறுவனத்தின் Diablo சிறந்த வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் சக்திவாய்ந்த 5.7 லிட்டர் வி12 இயந்திரத்தையும் கொண்டுள்ளது.

இந்த இயந்திரம் 492 குதிரை வலுவை உற்பத்தி செய்கிறது. இந்த கார் 4.1 வினாடிகளில் 60 மைல் வேகத்தை அடையும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 235 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.