இந்தியாவில் வேகமாக பரவும் புற்றுநோய்: 2022 இல் புற்றுநோய் காரணமாக 9.1 லட்சம் பேர் இறந்துள்ளனர்

OruvanOruvan

WHO

இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக 9.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆண்களுக்கு அதிகமாக உதடுகள், வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் அதிகரித்துள்ளன.

அனைத்து புதிய பதிவுகளுக்கு அமைய 27 சதவீதமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதாகவும் 18 சதவீதமான பெண்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.3 கோடியை தாண்டியுள்ளது.