நடமாடும் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்: விமானி உட்பட பலர் உயிரிழப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடமாடும் வீடு ஒன்றின் மீது சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்ததாக கிளியர்வாட்டர் தீயணைப்பு படையின் பிரதானி ஸ்கொட் ஈலர்ஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.
விமானம் விபத்துக்கு உள்ளாகும் முன்னர் அதன் விமானி உதவி கேட்டு அவசர அழைப்பு விடுத்ததாக ஈலர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாகவும் கீழே இருந்த ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன.