இந்தோ - பசுபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு: இந்தியாவுடன் $4 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல்

OruvanOruvan

A model of the MQ-9B drone at the Paris Air Show in June

சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிகக் வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தோ - பசுபிக் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்த கவலைகளுக்கு மத்தியில் தெற்காசிய நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக அமெரிக்கா இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

ஒப்பந்தத்தின் படி இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 31 ஆயுதமேந்திய ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களை கொள்முதல் செய்யும்.

2023 ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது MQ-9B பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும் டிசம்பரில், அமெரிக்க மண்ணில் இந்தியப் படுகொலைச் சதி இருப்பதாகக் கூறப்படும் விசாரணை நிலுவையில் செனட் குழுவால் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்குப் பின்னர் ஒப்பந்தம் இப்போது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.