கென்ய தலைநகரை தீக்கிரையாக்கிய வெடி விபத்து: இருவர் பலி, 222 பேர் காயம்

OruvanOruvan

Kenyan capital

கொன்யாவின் தலைநகர் நைரோபியில் வியாழன் இரவு (01) ஏரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் 222 பேர் காயமடைந்தனர் என்று அந் நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் வியாழன் இரவு 11.30 மணியளவில் ஏரிவாயு ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் வெடித்ததில் தீப்பரவியுள்ளது.

தீப்பரவலினால் குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் என்பன தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

OruvanOruvan

Kenyan capital

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நைரோபி வெஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்பிய படங்கள் பல குடியிருப்புகளை தீயில் கருகுவதை வெளிக்காட்டியது.

கென்யா செஞ்சிலுவைச் சங்கம்

விபத்து குறித்து முன்னதாக கென்யா செஞ்சிலுவைச் சங்கம், அனர்த்தத்தில் சுமார் 300 பேர் காயமடைந்ததாக அறிவித்திருந்தது.

நைரோபியில் உள்ள வைத்தியாலைகளில் 271 நபர்களை பல்வேறு அவசரகால பிரிவுகள் அனுமதித்துள்ளதாகவும் கென்ய செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியது.