தந்தையின் தலையுடன் காணொளியில் தோன்றிய இளைஞன்: வீட்டில் காணப்பட்ட தலையில்லாத சடலம்
அமெரிக்காவில் தந்தையின் தலையை வெட்டினார் என சந்தேகிக்கப்படும் இளைஞனை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் காணொளி ஒன்றில் தோன்றிய ஜஸ்டின் மோன் என்ற இளைஞன், அது தன்னுடைய தந்தையின் தலை என கூறியுள்ளார்.
அத்துடன் அமெரிக்க அரச அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையில் இறங்க வேண்டும் எனவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் சமஷ்டி விசாரணை அமைப்பான FBI பிரதானி கிறிஸ்டஃபர் வுரே, அமெரிக்க சட்டமா அதிபர் மெர்ரிக் கார்லண்ட் ஆகியோரை பிடித்தால் கொடுத்தால்,பெறுமதியான பரிசு வழங்கப்படும் எனவும் ஜஸ்டின் காணொளியில் கூறியுள்ளார்.
இந்த காணொளி குறித்து விசாரணைகளை நடத்திய FBI பொலிஸார், மத்திய பென்சில்வேனியாவில் 33 வயதான ஜஸ்டினை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரது வீட்டில் காணப்பட்ட நிலையில், தலையில்லாத சடலத்தையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக கொலை மற்றும் வன்செயல்களை தூண்டியமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.