ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது: சொத்து மதிப்பு 67.6 பில்லியன் ரூபிள்கள்

OruvanOruvan

Russian President Vladimir Putin

விளாடிமீர் புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக 6 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட உள்ளார்.

இந்த பின்னணியில் ஜனாதிபதி புடினின் வருமான தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வேட்புமனு பத்திரத்தில் அவரது வருமானம் மற்றும் சொத்து விபரங்களை சேர்த்துள்ளார்.

அண்மையில் புடின் வழங்கிய வேட்புமனு பத்திரத்தின் விபரங்களை ரஷ்ய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் புடின் கடந்த 6 ஆண்டுகளில் இருந்து அவரது சொத்து மதிப்பு 67.6 மில்லியன் ரூபிள்கள் அதாவது 7 லட்சத்து 53 ஆயிரம் அமெரிக்க டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2018 முதல் 2024 வரை புடின் கொள்வனவு செய்த சொத்துகளின் மதிப்பை ரஷ்ய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

வங்கியில் உள்ள வைப்புத்தொகை, இராணுவ ஓய்வூதியம், பல இடங்களில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் இந்த தொகை பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வல்லரசு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியின் ஓராண்டுக்கான சம்பளம் 4 லட்சம் அமெரிக்க டொலர்கள் இந்த தொகையுடன் ஒப்பிடும் போது, ரஷ்ய ஜனாதிபதியின் ஆண்டு வருமானம், அமெரிக்க ஜனாதிபதியை விட மிகக் குறைவு.

ரஷ்யா தேர்தல் ஆணைக்குழுவின் விபரங்களின் புடினது 10 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 54.5 மில்லியன் ரூபிள்கள் அதாவது 6 லட்சத்து 6 ஆயிரம் டொலர்களை பணத்தை வைத்துள்ளார்.

அவருக்கு சொந்தமாக ஐந்து வாகனங்களும் இருக்கின்றன.. அவற்றில் இரண்டு விண்டேஜ் சோவியத் யூனியன் கார்கள் GAZ M-21s. 2009 இல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 4x4 கார் மற்றும் 1987 இல் ஒரு கேம்பிங் டிரெய்லர். புடினுக்கு மொஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ஆகிய இடங்களில் இரண்டு தொடர்மாடி குடியிருப்புகள் உள்ளன.

எனினும் புடினுக்கு பின்லாந்து எல்லையில் இரகசிய மாளிகை இருப்பதாக மொஸ்கோ டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது.

இந்தக் கட்டுரை வெளியான மறுநாள் ரஷ்ய தேர்தல் ஆணைக்குழு, புடினின் வருமானம் மற்றும் சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது.

பின்லாந்து எல்லையில் கரேலியாவின் லேக் லடோகா தேசிய பூங்காவில் அதிநவீன இரகசிய மாளிகை புடினுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பேசப்படுகிறது.

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் மார்ச் 15 முதல் 17 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. 2020 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் காரணமாக 71 வயதான ஜனாதிபதி புடின் எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும்.