ஜோர்தான் தாக்குதலில் பலியான வீரர்களின் விபரத்தை வெளியிட்ட அமெரிக்கா: பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரிக்கை

OruvanOruvan

Three US soldiers killed in Jordan

ஜோர்தானில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இராணுவ வீரர்களின் பெயர்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.

சார்ஜென்ட் வில்லியம் ஜெரோம் ரிவர்ஸ் (வயது 46), ஸ்பெஷலிஸ்ட் கென்னடி லாடன் சாண்டர்ஸ் (வயது 24) மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ப்ரோனா அலெக்ஸாண்ட்ரியா மொஃபெட் (வயது 23), ஆகியோரே ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலுக்கு ஈரானிய ஆதரவு குழுக்களை அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஈரானுடன் போரை அமெரிக்கா விரும்பவில்லை என்றும் பென்டகன் வலியுறுத்தியுள்ளது.

"நாங்கள் போரை நாடவில்லை, எனினும் எங்கள் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்போம்" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறினார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானம் ஈரானில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக பிபிசியின் அமெரிக்க தொடர்பு செய்திச் சேவையான சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

எனினும், தாக்குதலுக்குக் காரணமான போராளிக் குழுக்களை ஆதரிப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது.