மாலைதீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது: சீனா சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

OruvanOruvan

Maldives

இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர சர்ச்சைக்களுக்கு பின்னர் மாலைதீவு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மாலைதீவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர பிரச்சினைகள் காரணமாக மாலைதீவுக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 7.1 வீத இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலைதீவு சென்றிருந்தனர். மாலைதீவுக்கு சுற்றுலா செல்லும் பத்து நாடுகளின் எண்ணிக்கையில் சீனா இடம்பெறாத நிலையில், தற்போது சீனாவில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் மாலைதீவு சென்றுள்ளனர்.

இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையில் ஏற்பட்ட ராஜதந்திர பிரச்சினையை அடுத்து அங்கு செல்லும் சீனா மற்றும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாலைதீவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தற்போது சீனா மூன்றாவது இடத்தில் இருப்பதுடன் பிரித்தானியா 5 வது இடத்தில் உள்ளது.

மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர பிரச்சினைக்கு இடையில் இந்திய பிரதமர் லட்சத்தீவுக்கு சென்று அங்கு சுற்றுலாத்துறை மேன்படுத்துவது குறித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதனை மாலைதீவு அமைச்சர்கள் விமர்சித்திருந்தனர். இதனையடுத்து இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர்கள் உட்பட பலர் மாலைதீவுக்கான தமது பயணங்களை இரத்துச் செய்தனர்.

இந்தியாவுக்கு சொந்தமான லட்சத்தீவில், மாலைதீவில் பேசப்படும் திவெயி மொழியே பேசப்படுகிறது.

லட்சத்தீவில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.