கடும் கோபத்தில் பிரான்ஸ் விவசாயிகள்: பாரிஸுக்கான அனைத்து வீதிகளும் முடக்கம்

OruvanOruvan

Farmers block key roads into Paris

புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு எதிரான பிரான்ஸ விவசாயிகளின் வீதி மறியல் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, தென்மேற்கு பிரான்ஸில் துலூஸ் விமான நிலையத்திற்கு செல்லும் வழியை தடுக்கும் வகையில் வைக்கோல் முட்டைகளை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், பாரிஸுக்கு செல்லும் வழிகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், என்ன நடந்தாலும் போராட்டத்திடம் முடிவுக்கு கொண்டுவரப்பட மாட்டாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் 'விவசாயத்தை காப்போம்' எனும் பதாதைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போராட்டங்கள் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்கும் என விவசாயிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பிரான்ஸ் அரசாங்கத்தின் தீர்மானங்களினால் கடுமையாக கோபமடைந்துள்ள விவசாயிகள் பெல்ஜியத்தில் உள்ள ஸைபுருகா கொள்கலன் முனையத்திற்கான வீதிகளை முற்றுக்கடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

எதிர்ப்புக்கள் அதிகரித்து வருவதையிட்டு எச்சரிக்கையடைந்த பிரான்ஸ் அரசாங்கம், ஐரோப்பிய தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, விவசாய எரிபொருள் மீதான மானியங்களை படிப்படியாகக் குறைக்கும் திட்டங்களை ஏற்கனவே கைவிட்டுள்ளதுடன், சுற்றுச்சூழல் விதிமுறைகளை எளிதாக்குவதாக உறுதியளித்துள்ளது.

அத்துடன், தரிசு நிலங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.