கரடியிடம் இருந்து தப்பிக்க கையை வெட்டிக்கொண்ட நபர்: தாய்லாந்தில் சுவிஸர்லாந்து நபருக்கு ஏற்பட்ட நிலைமை

OruvanOruvan

Stefan Speccogna-Charity Worker

தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் சுவிஸர்லாந்து ஆண் ஒருவர் கரடியிடம் இருந்து தப்பிக்க தனது கையை வெட்டிக்கொண்டுள்ளார்.

வனவிலங்கு சம்பந்தப்பட்ட தொண்டு ஊழியரான 32 வயதான ஸ்டெஃபான் ஸ்பெக்கொக்னா என்ற சுவிஸர்லாந்து பிரஜை, கரடிக்கு உணவு ஊட்டுவதற்காக கூண்டுக்குள் கையை நீட்டியபோது எதிர்பாராத விதமாக கூண்டுக்குள் இருந்த கரடி அவரது கையைக் கவ்வியுள்ளது.

கரடியிடம் இருந்து தப்பிக்க அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கரடி அவரது கையை விடவில்லை.

இதனையடுத்து வேறு வழியின்றி தன்னை காப்பாற்றிக்கொள்ள கத்தி ஒன்றைப் பயன்படுத்தி தனது கையை அவர் வெட்டிக்கொண்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். அவரது கை முழங்கைக்கு கீழே வெட்டப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்ட அவரது கை சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கரடியை அடித்துத் துன்புறுத்துவதற்குப் பதிலாக ஸ்பெக்கொக்னா தனது கையை வெட்டிக்கொண்டார் எனவும்ம் அந்த அளவுக்கு விலங்குகள் மீது பற்றுள்ள நல்ல உள்ளம் கொண்டவர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கரடி டோய் ஃபா டேங் தேசிய பூங்காவில் இருந்து வனவிலங்கு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.