ஸ்பைடர் மேன் தொடரை பார்த்து சகோதரனை சுட்டுக்கொன்ற 3 வயது சிறுவன்: அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் நடந்த சம்பவம்

OruvanOruvan

A 3-year-old boy shot his brother.

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் மூன்று வயதான சிறுவன் தனது இரண்டு வயதான சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் பின்னர் பொலிஸார் சிறுவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ​​​​தொலைக்காட்சியில் ஸ்பைடர் மேன் தொடரை பார்த்துவிட்டு தனது தந்தை மேசை லாட்சில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது தம்பியை சுட்டுக் கொன்றதாக சிறுவன் கூறியுள்ளார். சிறுவனின் இந்த பதில் காரணமாக பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் கென்டன் கவுண்டியில் மூன்று வயதான சிறுவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சிறுவனின் இளைய சகோதரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முழுமையாக தோட்டக்கள் நிரப்பபட்ட துப்பாக்கி சிறுவனின் கையில் கிடைக்கும் வகையில் பெற்றோர் பொறுப்பற்ற முறையில் அதனை வைத்திருந்த காரணத்தினால் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், சிறுவனின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

வீட்டில் வைத்துள்ள துப்பாக்கிகள் தொடர்பாக பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை பெற்றோருக்கு நினைவூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.