பேரசூட்டில் கீழே குதித்து சாகசம் புரிய முயற்சித்தவர் மரணம்: தாய்லாந்தில் பிரித்தானியருக்கு நடந்த விபரீதம்

OruvanOruvan

British skydiver fell and death in Pattaya

தாய்லாந்தில் 29 மாடி உயரத்தில் இருந்து பேரசூட் மூலம் கீழே குதித்த முயற்சித்த பிரித்தானியரான பேரசூட் சாகச வீரர் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தின் பட்டாயா நகரில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் 33 வயதான நேத்தி ஓடின்சன் என்பவர் நேற்று எவரும் அறிவிக்காது பேரசூட் மூலம் 29 வது மாடியில் இருந்து கீழே குறித்து சாகசம் புரிய முயற்சித்த போது பேரசூட் விரியாத காரணத்தினால், இந்த விபரீதம் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக கிடைத்த தவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பட்டாயா பொலிஸார், தரையில் கிடந்த பிரித்தானியரின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் மீது விரியாத பேரசூட் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஒடின்சனின் நண்பர் ஒருவர், கீழே இருந்து காணொளியை பதிவு செய்ய அவர் மாடியில் இருந்து குதித்துள்ளார்.

எனினும், பேரசூட்டு இயங்கவில்லை என்பது அவரது உடல் மரக்கிளைகள் மீது பட்டு அவர் தரையில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காணொளி பதிவுசெய்வதற்காக சென்றிருந்த ஒடின்சனின் நண்பரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடின்சனின் ‘Nathy’s Sky Photography’ முகநூல் பக்கம் இதுவரை 5 ஆயிரம் விருப்பங்களை பெற்றுள்ளது எனவும் பக்கத்தை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.