ஈரானிய கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்: விசேட பாதுகாப்புத் திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா
சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்களை கடத்தும் முயற்சிகளில் சோமாலிய கடற் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒருபுறம் செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் உலகளாவிய சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிவரும் பின்புலத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களின் செயல்பாடுகளும் அதிகரித்துள்ளன.
கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
"#IndianNavy's Mission என்ற பாதுகாப்புத் திட்டத்தின் ஈரானிய கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தமது ‘எக்ஸ்‘ தளத்தில் கூறியுள்ளார்.
கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை பாதுகாப்பாக விடுவித்துள்ளதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.