வைத்தியசாலையை விட்டு வெளியேறிய இளவரசி கேத்தரின்: முழுமையாக குணமடைய பல நாட்கள் ஆகுமாம்

OruvanOruvan

Catherine, Princess of Wales

வயிற்று அறுவை சிகிச்சையை தொடர்ந்து வேல்ஸ் இளவரசி கேத்தரின், சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

கென்சிங்டன் அரண்மனையின் அறிக்கையில்,

இளவரசி இப்போது வின்ட்சரில் உள்ள அவரது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் என்றும் அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையின் சரியான தன்மை வெளிப்படுத்தப்படவில்லை, எனினும் அவர் முழுமையாக குணமடைய பல நாட்கள் ஆகும்.

இளவரசி தனது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 13 இரவுகளை வைத்தியசாலையில் கழித்தார்.

42 வயதான கேத்தரின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அனுமதிக்கப்பட்ட அதே வைத்தியசாலையில் தங்கியிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் விரிவாக்க அறுவை சிகிச்சைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமையன்று மன்னர் சார்ல்ஸ் இளவரசியை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.