மோனாலிசா மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு: பெண் வேடமிட்டு வந்த ஆண், ஓவியத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

OruvanOruvan

உலகப் புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியத்தின் மீது தக்காளி சூப் ஊற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத கண்ணாடிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் ஓவியம் சேதமடையவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் Riposte Alimentaire என்ற அமைப்பின் செயல்பாட்டாளர்கள் என்று அறியமுடிகின்றது.

அறிக்கைகளின்படி, அவர்கள் பரிஷ்டிகி வாடா அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளதாகவும், ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவுக்கான உரிமைக்காக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

2022 இல் மோனாலிசா ஓவியத்தின் மீதும் இவ்வாறதொரு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. சக்கர நாற்காலியில் பெண் வேடமிட்ட ஆண் ஒருவர் லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு வந்து தாக்குதல் நடத்தினார்.

1950களில் இருந்து, மோனாலிசா ஓவியத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த கால்பகுதியில் ஒருவர் ஓவியத்தின் மீது ஆசிட் ஊற்றியிருந்தார்.

மோனாலிசா ஓவியம் 1911 இல் லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் அதை விற்க முயன்றபோது, ​​திருடப்பட்ட ஓவியம் மீளவும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.