சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் பொது மக்களை தாக்கியது இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 174 பேர் பலி

OruvanOruvan

Gaza Strip

இனப்படுகொலைகளை தவிர்க்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில் இஸ்ரேல் காஸா மீது நேற்று மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் போராளிகளுடன் நடந்து வரும் போரில் மக்களைக் கொல்வதையும், அழிப்பதையும் தவிர்க்கவும், இனப்படுகொலையை தவிர்க்கவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் இந்த கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதல் 24 மணி நேரத்தில் 174 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 310 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

காஸாவின் ரஃபாவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.