சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் விசா இன்றி பயணிக்கலாம்: மார்ச் மாதம் நடைமுறைக்கு வரும் உடன்படிக்கை

OruvanOruvan

Suvarnabhumi International Airport Reuters

தாய்லாந்தும் சீனாவும் தமது நாடுகளின் பயணிகள் இருநாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் யோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் பர்ன்ப்ரீ பஹித்த-நுகாரா இன்று (28) தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருநாடுகளின் பயணிகளுக்கு விசா இன்றி செல்ல அனுமதி வழங்கும் உடன்படிக்கையானது எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உத்தியோகபூர்வ விஜயமாக தாய்லாந்து சென்றிருந்தபோது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.