பறவைகள் டைனோசரஸ்களின் வழித்தோன்றல்களா?: விண்கல் பூமியை தாக்கிய போது பறவைகள் மட்டும் தப்பித்தன

OruvanOruvan

Birds and Dinosaurs

பூமியில் வாழ்ந்த நிலையில் சுமார் ஆறரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன டைனோசரஸ்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

டைனோசர்கள் பூமியில் இதுவரை வாழ்ந்த விலங்குகளில் மிகப்பெரிய விலங்குகள் என்பதை நாம் அறிவோம். சுமார் ஆறரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்கியதன் காரணமாக இங்கு வாழ்ந்த டைனோசரஸ்கள் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனினும் டைனோசரஸ்களின் பரம்பரை இன்னும் பூமியில் உயிருடன் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞானிகளின் இந்த கருத்து விசித்திரமாக தோன்றினாலும் அது உண்மையே. பறவைகள் டைனோசர்களின் வழித்தோன்றல்கள் என கூறப்படுகிறது.

பூமியில் இருக்கும் பறவைகள் டைனோசரஸ்களின் வம்சாவளியைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால், டைனோசரஸ்கள் உலகில் இருந்து முற்றிலும் மறைந்துவிடவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டைனோசர்களும் பறவைகளும் ஒன்றாக வாழ்ந்ததே இதற்கு காரணம். டைனோசரஸ்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டன. ஆனால் பறவைகள் உயிர் பிழைத்தன.

இதற்கு தொடர்பில் விஞ்ஞானிகள் எந்த ஒரு உறுதியான ஆதாரத்தையும் இதுவரை வழங்கவில்லை. எனினும் அதனை நிரூபிக்க பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. டைனோசரஸ்களின் உடல் அமைப்பு பறவைகளின் உடல் அமைப்பைப் போன்றது என கூறுகின்றனர்.

அந்த மிகப்பெரிய பேரழிவில் பறவைகள் எவ்வாறு உயிர் பிழைத்தன என்பதற்கான சரியான காரணத்தை விஞ்ஞானிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

எனினும்,சிறுகோள் பூமியைத் தாக்கிய பின்னர் பற்கள் இல்லாத பறவைகள் மாத்திரம் உயிர் பிழைத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கான சரியான கோட்பாடு இன்னும் வெளிவரவில்லை. தற்போதைய கோட்பாடுகள் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கருதுகோலின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.