ஹவுத்தி போராளிகளின் புதிய தாக்குதல்: ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரியும் எண்ணெய் கப்பல்

OruvanOruvan

Oil tanker on fire in Gulf of Aden

ஏடன் வளைகுடாவில் உள்ள ஒரு எண்ணெய் கப்பல் யேமனின் ஹவுதி போராளிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பின்னர் தீப்பிடித்து எரிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான பிரிட்டிஷ் எண்ணெய் கப்பலின் இயக்குனர் இது தெடர்பில் கூறுகையில்,

செங்கடலைக் கடந்து ஏடன் வளைகுடாவில் ஒரு ஏவுகணையால் கப்பல் தாக்கப்பட்டது.

கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கப்பலில் உள்ள தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன - என்றார்.

ஈரான் ஆதரவு போராளிகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்று, எங்கள் நாட்டிற்கு [யேமன்]" எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் வகையிலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியது.

இந்த தாக்குதல் குறித்து பிரிட்டிஷ் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

யேமனின் ஹவுத்திகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து போராளிகள் கப்பல் கப்பல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலை அடுத்து, கப்பல் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்ததாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியது.

எனினும் தாக்குதலினால் உயிர் சேதமோ காயங்கள் எதுவுமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது செங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஈரான் ஆதரவு போராளிகளின் வணிகக் கப்பல் மீதான அண்மைய தாக்குதலாகும்.