சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்ரேலை தனிமைப்படுத்தும்: ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி

OruvanOruvan

International Court of Justice in the Netherlands Bloomberg

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்தேச நீதிமன்றம் நேற்று (26) வழங்கிய தீர்ப்பு, இஸ்‌ரேலை தனிமைப்படுத்தவும் காஸாவில் அந்நாடு மேற்கொண்டு வரும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை உலகிற்கு வெளிக்காட்டவும் உதவும் என ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி சமி அபு ஸுரி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலைகளை இஸ்‌ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவ அது கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியது.

எனினும் போரை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட வேண்டும் என தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

போர் நிறுத்தத்துக்கு உத்தரவிட சர்வதேச நீதிமன்றம் தயங்குவதாக ஹமாஸ் அமைப்புடன் இணைந்து இஸ்‌ரேலுக்கு எதிராகப் போரிட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.