அவதூறு வழக்கில் ட்ரம்புக்கு $83.3 மில்லியன் செலுத்த உத்தரவு: மேன்முறையீடு செய்ய ட்ரம்ப் தீர்மானம்

OruvanOruvan

Donald Trump and E Jean Carroll

2019 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, ​​ஊடகவியலாளர் இ ஜீன் கரோலை அவதூறு செய்ததற்காக டொனால்ட் டிரம்ப்க்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (£65m) செலுத்த வேண்டும் என்று நியூயோர்க் நடுவர் மன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.

டிரம்ப் 1990 களில் கரோலை அவதூறு செய்ததாகவும் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் முந்தைய சிவில் வழக்கு விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந் நிலையில் பொதுவெளியில் டொனால்ட் ட்ரம்ப், பாலியல் வன்புணர்வு வழக்கின் பின்னர் தன்னை பல முறை அவமானப்படுத்தியதாக கரோல் நியுயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த உத்தரவு கரோல் கொண்டு வந்த வழக்கில் மற்றொரு நடுவர் மன்றத்தின் கடந்த ஆண்டு 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராத பாலியல் வன்கொடுமை மற்றும் அவதூறு தீர்ப்புடன் இணைந்து டிரம்ப், அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை $88.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தியது.

எனினும் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள ட்ரம்ப், நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக கூறினார்.

Yuki IwamuraYuki Iwamura

E. Jean Carroll leaves court on Friday. Yuki Iwamura/AP Yuki Iwamura