மூன்றாம் உலகப் போர் எங்கிருந்து ஆரம்பிக்கும்: Chat GTPயின் கணிப்பு

OruvanOruvan

Chat GTP's prediction of World War III

ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் பல நாடுகள் மூன்றாம் உலகப் போர் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவலையடைந்துள்ளன.

இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூன்றாம் உலகப் போருக்கான தனது கணிப்புகளை தனது Chat GTPயில் வெளிப்படுத்தியுள்ளது. ஆறு பிராந்தியங்களில் இருந்து மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என அது கணித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய இராணுவ தளபதி பெட்ரிக் சேண்டர்ஸ் மற்றும் நேட்டோ பிரதானிகள் போருக்கு தயாராகுமாறு தமது நாடுகளின் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

பிரித்தானிய இராணுவ தளபதி மற்றும் நேட்டோ இராணுவ பிரதானிகள், ஆயுதம் ஏந்த தயாராக இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டனர். ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு சிவில் இராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், போர் ஆரம்பித்தால், ரிசர்வ் படைகளின் பலம் போதுமானதாக இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இவர்களின் இந்த அறிவிப்பால், முழு உலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருவதாக பல நாடுகள் கருதுகின்றன.

இதனிடையே Chat GTPயிடம் மூன்றாம் உலகப்போர் தொடர்பான Hotspots பற்றி கேட்கப்பட்டபோது, ​​அது ஆறு Hotspotsகளை வெளிப்படுத்தியுள்ளது.

கொரிய தீபகற்பம்

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மோதலில் அமெரிக்காவின் தலையீட்டால் நிலைமை மோசமாகி வருகிறது. வடகொரியா அடிக்கடி புதிய ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. வடகொரியாவுக்கு சீனா, ரஷ்யா உட்பட ஏனைய நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. இதனால் மூன்றாம் உலகப் போர் கொரிய தீபகற்ப பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம் என Chat GTP கணித்துள்ளது.

மத்திய கிழக்கு

மத்திய கிழக்கில் பல தசாப்தங்களாக மோதல்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனிடையில் ஈரானின் அண்டை நாடுகளில் மேற்கொண்டுள்ள தலையீடுகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அது எந்த நேரத்திலும் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் எனவும் Chat GTP கணித்துள்ளது.

தாய்வான் நீரிணை

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் திருப்பங்களை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதால், நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எந்த நேரத்திலும் மூன்றாம் உலகப் போர் வெடிக்க இது காரணமாக இருக்கலாம்.

கிழக்கு ஐரோப்பா

கிழக்கு ஐரோப்பிய பகுதிகள் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளன. ரஷ்யா, உக்ரைன் மற்றும் நேட்டோ தொடர்பான மோதல்களால் கிழக்கு ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் கடுமையான மோதல்களுக்கு வழிவகுக்கலாம்.

தென் சீனக் கடல்

தென் சீனக் கடல் தொடர்பாக சீனாவுக்கும் அதன் அயல் நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து மோதல்கள் நிலவி வருகின்றன. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் இதற்கு தூண்டுகோலாக செயற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், எந்த நேரத்திலும் இந்த பிராந்தியத்தல் பதற்றம் உச்சத்தை அடைந்து, மூன்றாம் உலகப்போர் இங்கிருந்து ஆரம்பிக்க வாய்ப்புள்ளது எனவும் Chat GTP கணித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

சுதந்திரத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் இடையில் பல தசாப்தங்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.