துருக்கியில் நிலநடுக்கம்: 5.01 ரிக்டர் அளவில் பதிவு

OruvanOruvan

earthquake strikes Turkey

துருக்கியில் சனிக்கிழமை (27) 5.01 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

கிழக்கு துருக்கியில் வியாழக்கிழமை (25) 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

துருக்கி உலகின் மிகவும் தீவிரமான நிலநடுக்க மண்டலங்களில் ஒன்றாகும்.

இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

2023 பெப்ரவரியில் அங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தின் விளைவாக 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்.

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டன.