மன்னர் சார்ல்ஸ் வைத்தியசாலையில் அனுமதி: இளவரசிக்கும் அறுவை சிகிச்சை

OruvanOruvan

King Charles

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் வேல்ஸ் இளவரசி கேத்தரின் அறுவை சிகிச்சை செய்த லண்டன் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மன்னர் தனது சொந்த திட்டமிட்ட சிகிச்சைக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (26) காலை வைத்தியசாலையில் தனது மருமகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மன்னர் குறைந்தது ஒரு இரவாவது வைத்தியசாலையில் கழிப்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மை குறிப்பிட்டுள்ளது.