கனேடிய மக்களின் தரவுகள் பொதுவெளியில் அதிகளவு பகிரப்படுகின்றன: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

OruvanOruvan

பெரும்பாலான கனேடிய மக்கள் தங்களன் தனிப்பட்ட தரவுகள் பொதுவெளியில் பகிரப்படுவதாக உணர்வதாக கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தற்போது தனிப்பட்ட தரவுகள் அதிகம் பகிரப்படுவதாக கனேடிய மக்கள் உணர்கின்றனர்.

இன்டரெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த கருத்து கணிப்பில்,

77 வீதமானோர் தங்களது தரவுகள் களவாடப்படுவதாகவும், 72 வீதமானோர் இணைய வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட தரவுகளுக்கு பாதுகாப்பு கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 வீதமானோர் தங்களது தரவுகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இக்கருத்து கணிப்பு தொடர்பில் இன்டரெக் நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் கோலெட் ஸ்டீவர்ட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகளவில் அக்கறை கொண்டுள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில் மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருத்து கணிப்பின் முடிவுகளின்படி, ஜனவரி 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட இணையத்தள கணக்கெடுப்பில் சுமார் 1500 கனேடியர்கள் பங்குப்பற்றினர்.

இதில் 80 வீதமானோர் தங்களது தரவுகள் இணையத்தில் எவ்வாறு பகிரப்படுகிறது என்பதில் அதிக கட்டுப்பாட்டை விரும்புகின்றனர். இது பெரம்பாலான மக்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

ஆனால் எங்கள் கணக்கெடுப்பின் முடிவில் எப்போது, ​​எங்கே, எவ்வளவு அடிக்கடி தங்கள் தரவைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கான வாய்ப்பாக உள்ளது” என தெரிவித்தார்.