சுவிஸில் வெளிநாட்டு மாணவர்களை கட்டுப்படுத்த தீர்மானம்: முக்கிய பல்கலைக்கழகமொன்று விடுத்த அறிவிப்பு
சுவிஸில் வெளிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிறந்த சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று இவ்வாறு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.
ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் லவுசானில் உள்ள 10,894 மாணவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
பொறியியல் மற்றும் இயற்கை விஞ்ஞானம் தொடர்பான சிறந்த ஆராய்ச்சி மற்றும் திட்டங்களுக்கு சர்வதேச அளவில் இருக்கும் நற்பெயரால் ஈர்க்கப்பட்டே இங்கு அதிகம் மாணவர்கள் வருவதாக சொல்லப்படுகிறது.
இது பற்றி கருத்து தெரிவித்த குறித்த பல்கலைக்கழகம், எவ்வாறாயினும்இ கடந்த பத்தாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால், ‘எங்கள் உயர் கல்வித் தரத்தை பராமரிக்கும் போது இது பல சவால்களை உருவாக்குகிறது.
எங்கள் விரிவுரை அரங்குகள் போதிய இடவசதி இல்லாமல் போகிறது. மாணவர்-ஆசிரிய விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும் எங்கள் சேவைகளுக்கான பணிச்சுமை கணிசமாக அதிகரித்துள்ளது’ என தெரிவித்துள்ளது.
எனவே 2025 முதல் 2029 வரை ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து புதிய இளங்கலை மாணவர்களுக்கான அணுகலை 3,000 சேர்க்கைக்கு கட்டுப்படுத்த பல்கலைக்கழகம் விரும்புகிறது எனவும் இது தொடர்பான இறுதி முடிவு மார்ச் 18 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக ஆண்டுதோறும் விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்து.