சிகாகோவில் பதற்றம்: 8 பேரை கொன்ற நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

OruvanOruvan

Suspect in killing of 8 people in suburban Chicago

சிகாகோவின் புறநகர் பகுதியில் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சந்தேக நபர் டெக்சாஸில் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெக்சாஸில் சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான மோதலுக்கு பின்னர் குறித்த நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக திங்கட்கிழமை (22) பிற்பகுதியில் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

23 வயதான ரோமியோ நான்ஸ் என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஆவார்.

சிகாகோ புறநகர்ப் பகுதிகளில் மூன்று இடங்களில் எட்டு பேரை நான்ஸ் சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அவரது இந்த நோக்கத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.