சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இரயில்சேவை பாதிப்பு

OruvanOruvan

Strong earthquake in China

சீனாவின் மேற்கு சின்ஜியாங் (Xinjiang) பிராந்தியத்தில் இன்று அதிகாலை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன நிலநடுக்க வலையமைப்பு மையத்தை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2 மணி 9 நிமிடமளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 27 இரயில்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, சீனாவின் தியான் சான் (Tian Shan) மலைத்தொடர்பில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.