உக்ரைன் நகரில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: அறுவர் பலி, 51 பேர் காயம்

OruvanOruvan

Russian rocket attack in Kharkiv, Ukraine, Tuesday, January 23, 2024

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கீவ் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 06 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 51 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் பல அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டிடங்களை அழித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்பு பணிகள் தற்சமயம் நடைபெற்று வருவதாக நகர மேயர் இஹோர் தெரெகோவ் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 30 அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.