இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹமாஸ் தாக்குதலில் ஒரே நாளில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

OruvanOruvan

மத்திய காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினர் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் 24 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவிக்கையில், “போர் தொடங்கியதில் இருந்து, இந்த நாள் மிக கடினமான நாட்களில் ஒன்று. முழுமையான வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவதை நிறுத்த மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 3 மாதமாக நடந்துவரும் போரில், இது மிகவும் மோசமான தாக்குதல் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 25,490 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 63,000 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உயர்ந்துள்ளது.