ஹமாஸ் தாக்குதல் ஒரே நாளில் 24 இஸ்ரேல் படையினர் பலி: போர் ஆரம்பித்த பின் நடத்த மிகப் பெரிய தாக்குதல்

OruvanOruvan

Israeli army soldier -Mint

காஸாவின் ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே நாளில் 24 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் ஆரம்பித்த பின்னர் ஹமாஸ் நடத்திய பயங்கரமான தாக்குதல் இதுவென கருதப்படுகிறது. காஸாவின் மத்திய பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் 24க்கும் மேற்பட்ட படையினரா தாம் இழந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு ஏவிய ஆர்.பி.ஜி ஏவுகணை இஸ்ரேல் படையினரின் பீரங்கி மீது விழுந்துள்ளது. அதேவேளை அருகில் உள்ள இரண்டு கட்டிடங்கள் மற்றொரு குண்டு வெடிப்பு காரணமாக உடைந்து விழுந்துள்ளன. இதில் கட்டிடத்திற்கு வெளியிலும் உள்ளேயும் இருந்த இஸ்ரேல் படையினர் உயிரிழந்துள்ளது.

இஸ்ரேல் படையினர் அந்த கட்டிடங்களை தகர்ப்பதற்காக கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்களை தயார் செய்துக்கொண்டிருந்த போது, ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படையினர் வைத்த குண்டுகளும் வெடித்து சிதறியுள்ளன.

இதன் காரணாக தமக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான தொடர் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 25 ஆயிரம் 295 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு கூறியுள்ளது.