ஹவுதி போராளிகளின் ஆயுத களஞ்சியம் மீது தாக்குதல்: அமெரிக்க,பிரித்தானிய படையினர் நடவடிக்கை

OruvanOruvan

US, UK Air strike Houthi targets Aljazeera

ஹவுதி போராளிகளின் ஆயுத களஞ்சியம் மீது தாக்குதல்-அமெரிக்க,பிரித்தானிய படையினர் நடவடிக்கை

யேமனில் ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான நிலத்தடியில் அமைந்துள்ள ஆயுத சேமிப்புக் களஞ்சியம் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து அமெரிக்க, பிரித்தானிய படையினர் நேற்று (22) மீண்டும் விமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறித்து வைத்து தாக்க ஹவுதி போராளிகள் பயன்படுத்தும் ஏவுகணை, கண்காணிப்புக் கட்டமைப்பையும் இலக்கு வைத்து அமெரிக்க மற்றும் பிரித்தானிய படையினர் இந்த தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க செயலகம் தெரிவித்துள்ளது.

காஸா மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தாம் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக யேமனில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

OruvanOruvan

அவுஸ்திரேலியா, பஹ்ரேன், கனடா, நெதர்லாந்து ஆகியவற்றுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க, பிரித்தானிய படையினர் 8 முறை தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஆறு நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சர்வதேச வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள ஹவுதி போராளிகளின் பலத்தை தகர்த்து அழிக்கவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஹவுதி போராளிகள் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்து வருவதாகவும் இதன் காரணமாக சர்வதேச ரீதியில் பணவீக்கம் ஏற்படும் ஆபத்து எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.