வளையத்தை தூக்கி வந்து வைரலான அனன்யா பாண்டே: பாரிஸ் ஹாட் கோச்சர் வீக் 2024 வில் கவனத்தை ஈர்த்த நடிகை

OruvanOruvan

Ananya in fashion show

பொலிவூட்டில் வளர்ந்துவரும் நட்சத்திர நடிகையான அனன்யா பாண்டே, பாரிஸ் ஹாட் கோச்சர் வீக் 2024 நிகழ்வில் டிசைனர் ராகுல் மிஸ்ராவின் வடிவமைப்பில் அணிந்துவந்த ஆடையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

24 வயதுடைய குறித்த நடிகை அந்த உடையில் நடந்து வந்து தலையை திருப்பும் விதமானது அனைவரையும் கவரும் விதமாக அமைந்துள்ளது.

மேலும், சிட்டி ஆஃப் லைட்ஸ்ஸில் பெரிய வளையத்துடன் நடந்து வந்த நடிகை என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் அனன்யா பாண்டே, "சூப்பர் ஹீரோஸ்" என்ற தலைப்பில் ஆரம்பமாக சுற்றில், ராகுல் மிஸ்ராவின் சமீபத்திய தொகுப்பைக் காட்சிப்படுத்தியிருந்தார்.

அதில் இது பூச்சிகளின் சிக்கலான உலகத்திலிருந்து உத்வேகம் பெறுவதை காட்சிபடுத்தல், பட்டாம்பூச்சிகள், வண்டுகள், பாம்புகள் மற்றும் பலவற்றால் ஈர்க்கப்பட்ட கூறுகளைக் கொண்ட அமைப்பை காட்டும் விதமாக அமைந்திருந்தது.

OruvanOruvan

இதன்போது, அனன்யா ஒரு பட்டாம்பூச்சியால் ஈர்க்கப்பட்ட கருப்பு நிற மினி-டிரெஸ்ஸில் பிரமிப்பூட்டினார். நேர்த்தியான ஹேர் பன் மற்றும் ஸ்டைலான கருப்பு ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

இவரின் காணொளியை அவர் தனது இன்ஸ்ட்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது.