நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த பயணி: கனடா நோக்கி சென்ற விமானத்தில் நடந்த சம்பவம்

OruvanOruvan

Air Canada

இங்கிலாந்தில் இருந்து நேற்று கனடா நோக்கி சென்ற விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்ற கதவைத் திறக்க முயற்சித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து நேற்று (22) பிற்பகல் கனடாவின் டொரோன்டோ நகருக்குக் புறப்பட்டுச் சென்ற ஏயார் கனடா விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த விமானத்தில் பயணம் செய்த வயதான பயணி ஒருவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததாக அதில் பயணித்த மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.

நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது வயதான அந்த பயணி விமானத்தின் கதவைத் திறக்க முற்பட்டுள்ளார்.

எனினும் டொரோன்டோ விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த ஏனைய பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், பொலிஸ்அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணைகளை நடத்தினர்.

அந்த பயணி ஏதோ ஒரு நெருக்கடியிலும் மனக்குழப்பத்திலும் இருந்ததாகவும் வேண்டுமென்றே அவர் விமானத்தின் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்தாக டொரோன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், வயதான அந்த பயணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.