ஈரான் கப்பலில் சோதனை நடத்திய அமெரிக்க கடற்படை வீரர்கள் மாயம்: செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

OruvanOruvan

U.S. Navy Ship

ஏடன் வளைகுடாவில் இருந்த ஈரானியக் கப்பலில் அதிரடிச் சோதனை நடத்திய இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதியன்று சோமாலியாவின் கடலோரப் பகுதிக்கு அருகில் இருந்த ஈரானியக் கப்பலில் அமெரிக்க வீரர்கள் இருவர் அதிரடிச் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடவடிக்கைக்கு பின்னர் காணாமல்போன அமெரிக்க கடற்படை வீரர்களை தேடும் பணியில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான் ஆகியன கூட்டாக இணைந்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டன.

தீவிர தேடுதல் பணிக்கு பின்னரம் குறித்த வீரர்களை கண்டுப்பிடிக்கமுடியவில்லை.

இதனையடுத்து, குறித்த வீரர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.

உயிரிழந்த வீரர்களின் மரணம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், தியாகங்கள் அளப்பரியது என்றும் அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் மேலும் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.