ஒற்றுமையின் தைப்பூசம்: விழாக்கோலம் பூணும் பினாங்கு

OruvanOruvan

Thaipusam Penang

மலேசியாவில்-பினாங்கு நகரில் இம்முறையும் தைப்பூசத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறவுள்ளதுடன் இவ்வாண்டு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் தைப்பூச நிகழ்வில் கலந்துக்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஒற்றுமையின் தைப்பூசம்’ எனும் கருப்பொருளில் தைப்பூச நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இம்முறை சிறப்பம்சமாக தங்க, வெள்ளி ரதங்களின் ஊர்வலத்தை ஒன்றாக இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

பினாங்கின் இந்து அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தங்க, வெள்ளி ரதங்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊர்வலமாக வருவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.

பினாங்கின் தைப்பூசத் திருவிழாவில் இந்து மதத்தினர் மாத்திரமின்றி சீனர்கள், சுற்றுலா பயணிகள் என அனைவரும் கலந்தக்கொள்வது வழக்கம்.

24 ஆம் திகதியன்று காலை 5.30 மணிக்கு லெபுக் குயின் கோவிலில் இருந்து தங்கத் தேர் பயணிக்கவுள்ளதுடன், அதனை தொடர்ந்து ஒர மணிநேரத்திற்கு பின்னர் வெள்ளி ரதம் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் கோலாகலமாக அரங்கேறும் தைப்பூச பெருநாளில் பங்குக்கொள்ள உலகெங்கிலும் உள்ள பக்த அடியார்களுக்கு ஆலய பரிபாலன சபை அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.