ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பயங்கர தாக்குதல்: 27 பேர் உயிரிழப்பு

OruvanOruvan

Terrible attack on Russian occupied territories

உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் - ரஷ்யா தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் தடுமாறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்களில் பலத்த உயிர் சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில், சர்வதேச அளவில் பெரும் பொருளாதார பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் சில பகுதிகளை தங்களின் கட்டுக்குள் வைத்திருப்பதால் தொடர்ந்தும் உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

இவ்வாறு நேற்று முன்னெடுக்கட்ட குறித்த தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யா வசம் இருக்கும் டொனெட்ஸ்க் பகுதியிலேயே உக்ரைன் படைகள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.