முடங்கவுள்ள ஜேர்மன் போக்குவரத்து: ரயில் சாரதிகள் 6 நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு

OruvanOruvan

German train drivers

ஜேர்மன் ரயில் சாரதிகள் புதன்கிழமை (24) முதல் ஆறு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜேர்மன் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் திங்களன்று, தற்போதைய ஊதிய முரண்பாட்டில் நான்காவது சுற்று வேலைநிறுத்தங்கள் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2 மணி (0100 GMT) முதல் அடுத்த திங்கட்கிழமை மாலை 6 மணி வரை (1700 GMT) தொடரும் என்று அறிவித்தது.

ஜேர்மன் வரலாற்றில் இது மிக நீண்ட வேலை நிறுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம், பொதிகள் சேவை ரயில் சாரதிகள் ஒரு நாள் முன்னதாக, செவ்வாய்கிழமை (23) மாலை 6 மணிக்கு வேலைநிறுத்தத்தைத் தொடங்க அழைப்பு விடுத்துள்ளனர்.

பணவீக்கத்தை ஈடுகட்ட அதிக சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜேர்மன் ரயில் சாரதிகள் அண்மைய காலப்பகுதியில் நடத்தும் நான்காவது வேலைநிறுத்தம் இதுவாகும்.